சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக தர்மபுரத்தில் விசேட சோதனை நடவடிக்கை
கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (27.10.2025) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை
தர்மபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது மோப்பநாய் சகிதம் பல வீடுகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத கசிப்பு 40 லீட்டருடன் சந்தேகநபர் ஒருவரும், அதேபகுதியில் 5.50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும், 5.1 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் சிக்கியுள்ளார்.
பணமும் மீட்பு
இவர்களிடமிருந்து 16,500 பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri