வன்புணர்வு குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை வீரர் தனுஷ்க! டொலர்களை கேட்கும் பெண்
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 மாதங்களுக்கு மேலாகும்
இருப்பினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது தனுஷ்க குணதிலக்க சிறையில் இருப்பதாகவும் அவுஸ்திரேலியாவின் சட்ட விவகாரம் முடிவடைய 10 மாதங்களுக்கு மேலாகும் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam