மன்னாரில் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கையளிப்பு (Photos)
மன்னார் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன் நானாட்டான்
பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி வழங்கப்பட்ட சுமார் 26 லட்சத்து 40 ஆயிரம்
ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் (21.07.2023) காலை வைபவ ரீதியாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையின் பொறுப்பு நிலையின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
இதன்போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், வைத்தியர்கள், நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |