நெல்லியடியில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரன் ஆராய்வு
நாடு முழுவதும் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 20 நகரங்களின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நெல்லியடி நகரமும் மானிப்பாய் நகரமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதற்கான கள ஆய்விற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரம் நேற்று(27.02.2026) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
இதன்போது, நெல்லியடி பேருந்து தரிப்பிடம் உட்பட நெல்லியடி நகரை நேரடியாக பார்வையிட்டு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், நெல்லியடி வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலருடனும் நெல்லியடி நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

இதேவேளை, கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் நெல்லியடி பேருந்து தரிப்பிடம் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சரின் முன்னாயத்த ஆய்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான கணேசரூபன், நிதர்ஷன், கவியரசி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri