தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!
புதிய இணைப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னக்கோனால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ரிட் மனு விசாரணை
இந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேல்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த 17 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவர் நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து தேசபந்து தென்னக்கோனை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர் சற்று முன்னர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் முடிவு செய்தது.
மேன்முறையீட்டு
அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
