மன்னாரில் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைத்து தருவதாக பிரதி அமைச்சர் வாக்குறுதி
மன்னார் பள்ளமடு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள கூராய் மற்றும் சன்னார் குளங்களை பிரதி அமைச்சர் அரவிந் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம்(20.12.2025) மேற்கொண்டுள்ளார்.
கடந்த நாட்களில் பெய்த மழை நேரத்தில் குறித்த குளங்கள் உடைப்பெடுத்து கூராய் ஆத்திமோட்டை கள்ளியடி என பல கிராமங்கள் அங்குள்ள மக்கள், கால் நடைகள், பயன் தரும் மரங்கள், மக்களின் தளபாட பொருட்கள், அன்றாட வாழ்க்கை தொழில் வரை பாதிப்படைந்திருந்தது.
புனரமைப்பு
இந்தநிலையில், குறித்த குளங்களை விரைவில் புனரமைத்து தருவதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், நீர்ப்பாசன அதிகாரிகள், பிரதேச வட்டார உறுப்பினர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.


