பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை.. தமிழரசுக்கட்சி வெளியிட்ட தகவல்

Ilankai Tamil Arasu Kachchi Ministry of Defense Sri Lanka Gnanamuththu Srineshan
By Bavan Aug 15, 2025 04:03 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர செயற்பட்டு இருந்த போது மனித உரிமை மீறல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் கேள்விக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், "பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை தீர்மானத்தை எதிர்கட்சியினர் கொண்டுவர இருக்கின்றனர்.

உரிய ஆதாரம் 

இது தொடர்பாக தமிழரசு கட்சியை பொறுத்தமட்டில் எவ்வாறு நடந்து கொள்வது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. இது விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது.

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை.. தமிழரசுக்கட்சி வெளியிட்ட தகவல் | Deputy Minister Of Defense Tamilarasu Katchi

உண்மையில் அருண ஜெயசேகர கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக இருக்கும் போது அவர் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்ற விஷயம் ஆராயப்பட வேண்டும்.

அவர் அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடையத்தில் செயல்பட்டு இருந்தால் அதற்கு உரிய ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால் அதை எதிர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியானது தங்கள் பக்கம் இருக்கின்றவர்கள் ஊழல் மோசடி இலஞ்சம் இல்லாத சுத்தமானவர்கள் தூய்மையானவர்கள் என கூறி வருகின்றனர்.

அது உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே அவர்களுடைய கருத்துக்களையும் எதிர்க்கட்சி கூறுகின்ற கருத்துக்களையும் ஆராய வேண்டியுள்ளது.

 நம்பிக்கை இல்லா தீர்மானம் 

அவர் உண்மையில் தமிழ் மக்களை பாதிக்க கூடிய விதத்தில் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சட்டவிரோதமான செயற்பாட்டில் உடன்பட்டிருந்தால் எமது கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்.

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை.. தமிழரசுக்கட்சி வெளியிட்ட தகவல் | Deputy Minister Of Defense Tamilarasu Katchi

அதேவேளை அவ்வாறு சம்பந்தப்படவில்லை என்கிற விஷயம் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆதரிப்பதா? எதிர்ப்பதா? புறக்கணிப்பதா? என தீர்மானத்தை எடுப்போம். அதேவேளை ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் வாதங்களின் கருத்துக்களை பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் இருந்த இராணுவ தளபதிகள் மனித உரிமைகளை மீறியுள்ளனர். புதைகுழி விஷயத்தில் கூட அப்போது இருந்தவர்கள் மனித உரிமைகளை மீறி அப்பாவி மக்களை புதைகுழிக்குள் புதைத்துள்ளனர்.

தேசபந்து தென்னக்கோன் பற்றி பல ஆதாரங்கள் கிடைத்தது எனவே அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம் ஏன் என்றால் அவர் கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு கட்சியின் ஒரு பொலிஸ் மா அதிபராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவு வழங்கினோம்” என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US