குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ள நிதி பிரதி அமைச்சர்

CID - Sri Lanka Police Social Media
By Shadhu Shanker Apr 18, 2025 02:46 PM GMT
Report

நிதி பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

முறைப்பாடு

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில் பிரதி அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ள நிதி பிரதி அமைச்சர் | Deputy Minister Mahinda Jayasinghe Complaint Cid

எனினும் புகைப்படங்களில் காணப்படும் பிறந்த நாள் கொண்டாட்டம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரிஉல்ல பகுதியில் நடைபெற்றது.

தனது மகள் களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருப்பதாகவும், அவர் தனியார் துறையில் வேலை செய்வதாகவும் நிதி பிரதி அமைச்சர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

போலியான செய்தி

இந்த போலியான செய்தி மூலம், முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தனது அரசியல் இயக்கத்திற்கும் கடுமையான அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ள நிதி பிரதி அமைச்சர் | Deputy Minister Mahinda Jayasinghe Complaint Cid

மேலும், தனது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பொய்யான செய்தி மூலம் வேண்டுமென்றே அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த தவறான செய்தி தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, அதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தனது முறைப்பாடு ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US