சிறை கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.05.2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி
இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இன்று (5.05.2023) மற்றும் நாளை (6.05.2023) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகள்
கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும்.
சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும்.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam