மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் 12ம் திகதி திறந்திருக்குமென அறிவிப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 12ம் திகதி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியையும் அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறையாக பிரகடனம் செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 12ம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வழமை போன்று பணிகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க விடுமுறை என்ற போதிலும் ஏற்கனவே நேரத்தை ஒதுக்கிக் கொண்ட சேவை பெறுனர்களின் நலனை கருத்திற் கொண்டு அலுவலகம் திறந்திருக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம், குருணாகல், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காணப்படும் கிளை அலுவலகங்களும் ஏற்கனவே நேரத்தை ஒதுக்கிக் கொண்ட சேவை பெறுனர்களுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
