வடக்கில் இடம்பெற்ற முதலாவது ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி! ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
ஓரே நாடு, ஒரே சட்டத்தின் செயலணித் தலைவர் ஞானசார தேரர் (Gnanasara Thera) வடக்கில் முதலவதாக நடத்திய கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் முதலாவது கூட்டம் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் தொடக்கம் மாலை வரை இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
இதன்போது அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப்பினர்களிடம் மட்டும் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன.
இதன்போது குறித்த கலந்துரையாடலில் செய்தி சேகரிப்பதற்கு சென்ற வவுனியா ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.