மக்களே அவதானம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதி டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு தொற்று பரவல் தொடந்தும் அதிகரித்து வருகிறது.
நாட்டில் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3063 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள்
மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் அதி டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
