திருகோணமலையில் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு பதிவு
திருகோணமலை - உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவருக்கு தலா 3500/= ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தில் நேற்று (13.06.2023) குறித்த வழக்கு நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் வீட்டு வளாகத்தில் குடம்பிகள் இருந்ததாக உறுதி செய்யப்பட்டதையடுத்து 14 பேருக்கும் ஒருவருக்கு 3500/= ரூபாய் வீதம் தண்டம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
சுகாதார வைத்திய அதிகாரி விளக்கம்
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்து வந்துள்ள நிலையில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளது.
இந்நிலையில் செல்வநாயகபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதியில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் வீட்டு வளாகங்களை சோதனை இட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
