முப்பதாயிரத்துக்கும் மேலாக அதிகரித்த டெங்கு நோயாளிகள்! 19 மரணங்களும் பதிவு
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளிகளும் 19 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மே மாதத்தில் மட்டும் 8,321 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.
19 மரணங்களும் பதிவு
இவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளிகளில் 50% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

'ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை 33, 572 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதுவரை, 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் 72 சுகாதார அதிகாரிகள் பிரிவில் அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நோயாளிகளில் 50% மேல் மாகாணத்திலும், 16% தென் மாகாணத்திலும், 09% சபரகமுவவிலும் பதிவாகியுள்ளனர்.