முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதனின் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டம் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இன்று காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளரும்,மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் செயலாளருமான கு.முரளீதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்கள் பிரதேச செயலாளர் ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவின் காணிக் கோரிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் இதன்போது புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள காணி உரித்து நிர்ணயித்தல்(Land Ownership) செயற்றிட்டம் தொடர்பாக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கு.முரளீதரனால் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைவிட இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் நேர்முகத் தேர்வின் முன்னேற்றம், Zoning plan தயாரித்தல், National Land Use Survey தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கு.முரளீதரன், குறித்த பிரதேச செயலாளர்கள், மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், கம நல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.











தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
