மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Indian fishermen Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Kumar Jan 15, 2025 08:10 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) வாவியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கடற்றொழிலால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என கடற்றொழிலால் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போது மட்டக்களப்பு வாவியில் நடைபெறும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பில் கடற்றொழிலார்கள் சங்கத்தினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 

தொடர் பிரச்சினை 

தடைசெய்யப்பட்ட வலைகள் மட்டக்களப்பு வாவிக்குள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மீன்கள் அழியும் நிலையேற்படுவதுடன் வாவியின் ஓரங்களில் காணப்படும் கன்னாதாவரங்களும் அழிக்கப்படுவதனால் மீன் இனங்கள் உற்பத்திகள் தடுக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு வாவி ஓரங்களை சிலர் நிரப்பி ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை அமைப்பதன் காரணமாகவும் சில இடங்களில் வீதிகளை அமைப்பதற்கு வாவிகளை நிரப்புவதன் காரணமாகவும் மீன்கள் அழிவடையும் நிலைமை காணப்படுவதாகவும் கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Demand Made By Batticaloa Fisheries Associations

இதேபோன்று தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பாவிக்கப்படுவதனால் மற்றும் சிறிய மீன்கள் பிடிக்கப்படுவதனால் மீன்கள் பெருக்கம் குறைவதாகவும் கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இவை காரணமாக வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எதிர்கால சமூகத்திற்கு சத்துள்ள மீன்களை வழங்குவதும் தடுக்கப்படுவதாகவும் இவற்றினை தடுத்து மீன் இணங்களை பாதுகாத்து எதிர்கால சமூகத்தற்கு வழங்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பு கடற்றொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Demand Made By Batticaloa Fisheries Associations

தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையிலான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் குரூஸ் கடற்றொழிலாளர் அமைப்புகளிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடற்றொழில் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளதாகவும் விரைவில் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இக்கூட்த்தில், மட்டக்களப்பு வாவியில் கடற்றொழிலில் ஈடுபடும் பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.  

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US