இலங்கையில் ”டெல்டா 30” கொரோனா திரிபு இல்லை: வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
இலங்கையில் ”டெல்டா ஏ30” என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இல்லை என்று சுகாதார நிபுணா்கள் அறிவித்துள்ளனா்.
இலங்கையில் ஏ30 கொரோனாத் தொற்றுத் தொடா்பில் அவதானமாக இருக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் தொிவித்திருந்தனா்.
Astrazeneca (அஸ்ட்ராசெனேகா) மற்றும் Pfizer (பைசர்) தடுப்பூசி செயல்திறனைத் தவிர்க்கக்கூடிய A30 என்றும் அழைக்கப்படும் டெல்டா 30 தொடர்பாக இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டும் என்றே சில அமைச்சா்கள் தொிவித்திருந்தனா்.
எனினும் டெல்டா 28 தொடா்ந்தும் இலங்கையில் உள்ளது. அது மோசமானதாக மாறக்கூடிய நிலையில் உள்ளது. எனவே அது பரவுவதைத் தடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மாறாக உலகில் கடந்த ஜூன் மாதத்துக்கு பின்னா் கண்டறியப்படாத டெல்டா 30 இலங்கைக்கு அச்சுறுத்தலை தரவில்லை என்று சுகாதார நிபுணா்கள் கூறியுள்ளனா்.
உலகில் இதுவரை குறைந்தது 5 நோயாளிகள் மட்டுமே A30 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவரான நீலிகா மாலவிகே இலங்கையில் இன்றுவரை ஏ30 ரக தொற்றுக்கள் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தநிலையில் டெல்டா பிளஸ் தற்போது 29 நாடுகளில் பரவியுள்ள போதிலும், இலங்கையில் இதுவரை கண்டறியப்படவில்ல என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனா்.