இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் குருந்தூர்மலை விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை

Mullaitivu Sri Lanka Economy of Sri Lanka
By Dhayani Jun 10, 2022 04:56 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பௌத்த விகாரையொன்று புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டு வந்தது.

பயிர் செய்கை நடவடிக்கைக்கு  தடை

குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டது.

மேலும், தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும், பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் குருந்தூர்மலை விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை | Dedication Buddha Statue At Kurundurmalai Temple

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில், தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்று வந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்த நிலையில், தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளது.

கலசத்தில் புத்தர் சிலை பிரதிஸ்டை 

இந்நிலையில், விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் குருந்தூர்மலை விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை | Dedication Buddha Statue At Kurundurmalai Temple

முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள்,முப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகள்,பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

பௌத்த விகாரைக்கு எதிராக வழக்கு தாக்கல்

இதேவேளை, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு இடைக்கால தடைகோரியும், தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறும் கோரி ஜனாதிபதி சட்டதரணி,நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் குருந்தூர்மலை விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை | Dedication Buddha Statue At Kurundurmalai Temple

இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் ஸ்ரீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் குருந்தூர்மலை விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை | Dedication Buddha Statue At Kurundurmalai Temple

விகாரை அமைக்கும் பணிகள் நிறைவு

இருந்தபோதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  

இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் குருந்தூர்மலை விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை | Dedication Buddha Statue At Kurundurmalai Temple

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US