கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனுக்கான தேவை குறைந்துள்ளது!
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனுக்கான தேவை, கணிசமாக மருத்துவமனைகளில் குறைந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
நாட்டில் ஒட்சிசன் நுகர்வைப் பொறுத்தவரை இது திருப்திகரமான சூழ்நிலையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்சிசன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் ஒக்சிசனுக்கு அதிக தேவை இருந்தது.
அதன்போது ஒட்சிசன் பயன்பாடு ஒரு நாளைக்கு 140 தொன் ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்சிசன் பற்றாக்குறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவிடம் போதுமான ஒக்சிசன் பெறப்பட்டன.
இருப்பினும், கடந்த ஆறு நாட்களில் ஒக்சிசனுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam