கனடாவில் அவசரநிலை பிரகடனம்! - கடுமையாகும் கட்டுப்பாடுகள்
கனடாவில் கனரக லாரி ஓட்டுநர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த கனடா அரசு கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது.
இந்த அறிவிப்புக்கு லாரி ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒட்டாவில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே, தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஓட்டாவா மேயர் கருத்து வெளியிடுகையில்,
“இந்த போராட்டம் வருத்தம் அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு சவலானது. தலைநகரில் உள்ள பொலிஸாரை விட போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.