பிரதமர் அலுவலக வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்
பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்திய வாகனங்கள் சிலவற்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தற்போதைக்கு பயன்படுத்திய 13 வாகனங்களை விற்பனை செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்
விற்பனை செய்யப்படவுள்ள வாகனங்களில் அவுடி கார் 01, லேண்ட் குரூசர் V8 வாகனங்கள் 04, மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள் 02, பீ.எம்.டப்ளியூ கார் 01, போர்ட் கார் 02 உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் உள்ளடங்கியுள்ளன.

குறித்த வாகனங்கள் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்கள் என்பதன் காரணமாகவே அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தற்போதைக்கு அலரி மாளிகையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri