மத்திய வங்கியின் நாணய சபையினால் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
மத்திய வங்கியின் நாணய சபையினால் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை 2022 முதல் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு செய்துள்ளது.
மத்திய வங்கி அதற்கான கட்டண கட்டமைப்பையும் திருத்தியுள்ளது. அதன்படி, வங்கிகளின் சொத்துக்களின் அடிப்படையில் கட்டணங்களின் வகை தீர்மானிக்கப்படுகிறது.
இதுவரையில் உயர்ந்த பிரிவாகக் கருதப்பட்ட சொத்துத் தளம், 2,000 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 33 மில்லியன் ரூபாவாக இருந்த வருடாந்த உரிமக் கட்டணத்தை 2022ல் இருந்து 38 மில்லியனாக உயர்த்தியுள்ளது. கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த கட்டணங்கள் 2021 இல் திருத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.