கிரிப்டோகரன்சி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
டிஜிட்டல் வங்கி, ப்லொக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த இணைந்த நிறுவனங்களுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான சாத்தியமான விதிமுறைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான கம்பனிகளுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 ஒக்ரோபர் மாதம் 05ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுஜீவ முதலிகே தலைமையில் 08 உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் இறுதி அறிக்கையினை 2022 யூன் மாதம் 30ம் திகதி ஆகும் போது சமர்ப்பிப்பதற்கும், குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக குறித்த துறைகளில் செயலாற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் இருவரை உறுப்பினர்களாக நியமிப்பதற்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan