மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கை மற்றும் மின்சார கட்டணத்துடன் தொடர்புடைய காரணிகளின் அடிப்படியில் மீளாய்வு நடவடிக்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் கருத்துக்கள்
அத்துடன், இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி மக்களின் பார்வைக்காக வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொது மக்களின் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு 21 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |