நீதியமைச்சின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்
நீதியமைச்சுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செலவைக்குறைத்தல், நிதி பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் ஒரு அம்சமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கூடிய பராமரிப்புச் செலவு, கூடுதல் எரிபொருள் பாவனை கொண்ட வாகனங்களே அவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
ஏல விற்பனை
தற்போதைக்கு பீ.எம்.டப்.ரக வாகனங்கள் இரண்டு, ஒரு நிஸான் எக்ஸ் ட்ரெயில் வாகனம், லேண்ட் ரோவர் டிபெண்டர் வாகனங்கள் இரண்டு, டொயோட்டா லேண்ட் குரூசர் வாகனங்கள் மூன்று, மிட்சுபிசி மொண்டரோ மற்றும் மிட்சுபிசி பெஜரோ ரக வாகனங்கள் என்று மொத்தம் பத்து வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வெகுவிரைவில் மேற்குறித்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
