இரு வருடங்களில் பாரியளவில் அதிகரித்த செலுத்த வேண்டிய கடன் தொகை
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் கடந்த 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆகிய இரண்டு வருடங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 5 ஆயிரத்து 252 ட்ரில்லியன் ரூபாய் என்ற அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி 2021 ஆம் ஆண்டு சம்பந்தமாக நேற்றிரவு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 14 ஆயிரத்து 155 ட்ரில்லியன் ரூபாயாக இருந்ததுடன் அது 2021 ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 407 ட்ரில்லியனாக அதிகரித்தது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அரசின் மொத்த கடன் தொகையானது மொத்த தேசிய வருமானத்தில் 94.4 சத வீதமாக இருந்தது.
அந்த தொகையானது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 115.5 வீதமாக அதிகரித்துள்ளது.

Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam