பாலங்களில் கட்டி தொங்கவிடப்படும் சடலங்கள்! பாதுகாப்புக்கு கேள்விக்குறி - உலக செய்திகள் (Video)
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதல்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எதிரிகளின் தலையை துண்டித்தும், உடல் உறுப்புகளை சிதைத்தும் கொடூரமாக கொல்லும் வன்முறைக் கும்பல், அந்த உடல்களை நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் கட்டி தொங்க விடுகின்றனர்.
இதனால் நெடுஞ்சாலை பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,