மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர்களில் ஒருவரான சசி புண்ணியமூர்த்திக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக சசி புண்ணியமூர்த்தி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
முறைப்பாடு
அதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் பொலிஸரால் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம்(30) விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம்(30) இரவு 12 .30 மணியளவில் அவரது தொலைபேசி ஊடாக குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நேற்று (31) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.