நாட்டில் தொடரும் மயக்க மருந்து காரணமான மரணங்கள் : விசாரணை நடத்த சுகாதார நிபுணர்கள் கோரிக்கை
கொழும்பு - தேசிய கண் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சத்திரசிகிச்சையின் போது உயிரிழப்பு
தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று (05.07.2023) கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர், சத்திரசிகிச்சையின் பின்னர் சுயநினைவின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த இரண்டு குழந்தைகளின் தாயான குறித்த பெண்ணுக்கு, கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குமுதேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தம்மால் எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களை எவரும் நிராகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam