ரஷ்யாவின் 40 விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் புகழ்பெற்ற விமானி மரணம்
ரஷ்யாவின் நாற்பது விமானங்களைச் சுட்டு வீழ்த்திய உக்ரைனின் சிறந்த விமானியான ஸ்டீபன் தாராபல்கா போரில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
29 வயதே ஆன விமானி தாராபல்கா ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்திப் புகழ்பெற்றுள்ளார். ஐந்துக்கு மேற்பட்ட விமானங்களை வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்கிற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் பெற்றுள்ளார்.
போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த போது மிக்-29 போர் விமானத்தில் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, மார்ச் 13ஆம் திகதி அவர் போரில் உயிரிழந்துள்ளதாகவும், இறக்கும் வரை ரஷ்யாவின் 40 விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவருடைய வீரமரணத்தை தொடர்ந்து, தற்போது அவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன.
இது குறித்து உக்ரைனிய அரசோ, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகமோ எந்தவிதமாக கருத்துக்களையும் தெரிவிக்கைவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.