நெடுந்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்! - மீனவர்கள் விசனம் (Video)
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
