வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலமானது நேற்றைய தினம் (31.05.2023) இரவு மீட்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குளம் - ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய பாலசிங்கம் சுரேஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தடயவியல் பொலிஸார் விசாரணை
குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (31.05.2023) இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்று தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள வேம்பு மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri