காலி முகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Murali Aug 02, 2022 12:27 AM GMT
Report

காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று காலை நபரொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் காலி முகத்திடலில் கடற்கரையில் கரையொதுங்கிய இரண்டாவது சடலம் இதுவென பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க நபருடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலிமுகத்திடலில் போராட்ட இடத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சடலம் கரையொதுங்கியமை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காலை காலிமுகத்திடலில் சடலம் கரையொதுங்கியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோட்டை பொலிஸ் அதிகாரிகள் பரிசோதித்து பின்னர் சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

காலி முகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல் | Dead Bodies Washed Ashore In Galle Face

இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை

இறந்தவரின் அடையாளம் நேற்று மாலை வரை அடையாளம் காணப்படவில்லை. இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த 29ஆம் திகதி காலிமுகத்திடல் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த இளைஞன் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பின்னர் அடையாளம் காணப்பட்டது.

18 வயதுடைய இளைஞன் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த 27ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி 29ம் திகதி காலிமுகத்திடல் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US