தயாசிறி ஜயசேகர மீது ஒழுக்காற்று விசாரணை நடத்த தீர்மானம்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஒழுக்காற்று விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் ஒழுக்காற்று விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதவிக்காலத்தில் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டதுடன், கட்சியை விட்டு விலகியவர்கள் இல்லாமல் கட்சியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம்
இந்தநிலையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக கட்சியின் மத்திய குழு கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) நடைபெற்றது.
இதன்போது ஜயசேகரவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



