தாவூதி போஹ்ரா சமூகத்தின் மாநாடு பாகிஸ்தானுக்கு மாற்றம் : நூற்றுக்கணக்கானோரின் இலங்கை பயணம் இரத்து
பல நாடுகளில் இருந்து பெருமளவானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தாவூதி போஹ்ரா (Bohra) சமூகத்தின் ஆன்மீக மாநாடான ஆசாரா முபாரகா (Ashara Mubaraka) இலங்கையிலிருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
எனினும் காரணம் கூறப்படாமல், தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான சையத்னா முஃபத்தால் சைஃபுதீனின் பயணம் பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டமையால், நிகழ்வும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரலை மூலம் நிகழ்வுகள்
இதனையடுத்து இலங்கைக்கு வரவிருந்த பலர் கொழும்புக்கான பயணத்தை இரத்து செய்துள்ளனர்.
இருப்பினும் இலங்கையில் உள்ள போஹ்ரா சமூகத்தினர் பாகிஸ்தானுடன் நேரலை மூலம் நிகழ்வை இணைந்து நடத்த தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து கருத்துரைத்துள்ளார்.
நிகழ்வின் மாற்றம் குறித்த செய்திகள் வந்தவுடன், சில முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டன.
விசா பிரச்சினைகள்
எவ்வாறாயினும், பாகிஸ்தானுக்கு பயணிக்கும் போது விசா பிரச்சினைகள் உள்ளன என்ற அடிப்படையில் சிலர் கொழும்புக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

கடந்த ஜூலை 6ஆம் திகதி முதல் 10 நாட்கள் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக செறிவூட்டலை வளர்ப்பது மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் என்று இலங்கை சுற்றுலாத்துறை முன்னர் எதிர்பார்த்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri