டிட்வா புயலால் யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் முழுமையான விபரங்கள்!

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Theepan Nov 30, 2025 12:23 PM GMT
Report

புதிய இணைப்பு 

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 11,193 குடும்பங்களைச் சேர்ந்த 36,088 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

குறித்த சீரற்ற காலநிலையால் 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 256வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 5243 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு 

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1014 குடும்பங்களைச் சேர்ந்த 3166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

06 பாதுகாப்பான இடங்களில் 149 குடும்பங்களை சேர்ந்த 445பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 2401 குடும்பங்களை சேர்ந்த 8293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

16 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 04 பாதுகாப்பு மையங்களில் 41 குடும்பங்களை சேர்ந்த 114 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களைச் சேர்ந்த 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு

மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு

கடுமையான சேதங்கள் 

08 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 373பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 338 குடும்பங்களைச் சேர்ந்த 1066 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

டிட்வா புயலால் யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் முழுமையான விபரங்கள்! | Damage In Jaffna Full Report Have Been Released

03 பாதுகாப்பு மையங்களில் 104 குடும்பங்களை சேர்ந்த 354 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 434 குடும்பங்களை சேர்ந்த 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 151 குடும்பங்களைச் சேர்ந்த 447 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 440 குடும்பங்களை சேர்ந்த 1470 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 09 பாதுகாப்பு மையங்களில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 16 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் 81 குடும்பங்களை சேர்ந்த 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 08 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 03 பாதுகாப்பு மையங்களில் 28 குடும்பங்களை சேர்ந்த 98பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேராதனையில் திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்! பரபரப்பு காணொளி..

பேராதனையில் திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்! பரபரப்பு காணொளி..

தற்காலிக தங்குமிடங்கள் 

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 1771 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 176 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 779 குடும்பங்களை சேர்ந்த 2503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 பாதுகாப்பு மையங்களில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 638பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டிட்வா புயலால் யாழில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் முழுமையான விபரங்கள்! | Damage In Jaffna Full Report Have Been Released

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 381 குடும்பங்களை சேர்ந்த 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். 17 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது.

03 பாதுகாப்பு மையங்களில் 35 குடும்பங்களை சேர்ந்த 135 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 579 குடும்பங்களை சேர்ந்த 1774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 06 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 03 பாதுகாப்பு மையங்களில் 132 குடும்பங்களை சேர்ந்த 352 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சற்றுமுன்னர் மாத்தளையில் பாரிய நிலச்சரிவு: தீவிரமடையும் மீட்பு பணிகள்

சற்றுமுன்னர் மாத்தளையில் பாரிய நிலச்சரிவு: தீவிரமடையும் மீட்பு பணிகள்

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US