டெய்சி பாட்டி மீது வழக்கு தொடர முடியாது.. வெளியான அதிர்ச்சி காரணம்!
யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்கு தொடர்வது ஆதாரமற்றது என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, தனது கட்சிக்காரர் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பராமரிப்பதற்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புரிதல் இல்லை
அத்துடன், 98 வயதான தனது கட்சிக்காரர், தனது தனிப்பட்ட விவகாரங்களை கூட சுயமாக நிர்வகிக்க முடியதாக நிலையில் உள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அவருக்கு எந்த புரிதலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது பதிலளிக்கவோ அவருக்கு இயலாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri