இரத்து செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பேருந்துகள்! முன்பதிவு செய்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வீதி மூடல்களால் இலங்கை போக்குவரத்து சபைின் சுமார் 1,500 பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேருந்துகளில் பயணிக்க ஏற்கனவே இருக்கைகளை முன்பதிவு செய்த 15,000 பயணிகள் இருப்பதாக சபையின் இருக்கை முன்பதிவு சேவையை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு திகதியை பெறல்
இதற்கமைய, முன்பதிவு செய்த இருக்கைகளுக்கு அவர்கள் விரும்பும் மற்றொரு திகதியில் இருக்கையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு திகதியை பெற 1315 அல்லது 070 3110 506 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும், இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, நுவரெலியா, நாவலப்பிட்டி, ரூட் 87, யாழ்ப்பாணம், வலப்பனை, மூதூர் மற்றும் பிபில போன்ற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை, ஆனால் பிற இடங்களுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்றும், இருக்கை முன்பதிவுகளும் உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.