வட மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார்: சி.வி விக்னேஸ்வரன் நம்பிக்கை
வடக்கு - கிழக்கில் சரியான நிர்வாகம் இல்லாமல் தமிழ் மக்களின் இலக்கை அடைய முடியாதெனத் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதியை தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் பல்வேறு முறைப்பாடுகள்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அதிகாரிகளை அவர்களது பதவியிலிருந்து கீழ் இறக்கும் செயற்பாடுகளை வட மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருவதாக சி.வி விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் வட மாகாண
ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு - கிழக்கு அரசியல்வாதிகள் சமஸ்டி வேண்டுமெனவும், சிலர் தனிநாடு வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
எவ்வாறான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதிலும், மாகாணத்தின் நிர்வாகம் எமது இலக்குகளை அடையக் கூடிய வகையில் வினைத்திறனாகச் செயற்படும் பட்சத்தில் மட்டுமே எமது இலக்குகளை உரியமுறையில் வெற்றி கொள்ள முடியும்.
அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொற்படி நடப்பவர்களாக அல்லாமல், மக்களின் தேவைகளை அறிந்து நேர்மையான வழியில் அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் 1980 ஆம்
ஆண்டு காலப்பகுதியில்,
மக்களுக்காக தமது காலத்தைச் செலவிட்ட பல நிர்வாகத் திறமையுள்ள அதிகாரிகளைக் கண்டுள்ளேன்.
எனவே ஒரு மாகாணத்திலுள்ள மக்களின் இலக்குகளை அடைவதற்கு மாகாண நிர்வாக சிறப்பாக இருப்பது அவ சுருதப்படும் நிலை மாகண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவாரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |