நடிகர் விவேக்கின் தற்போதைய நிலை! - வைத்தியசாலை அறிக்கை வெளியானது
திடீர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவேக்கின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நடிகர் விவேக், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனைதான் உள்ளது. விவேக்கிற்கு கோவிட் - 19 தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan