தொடரை வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்! வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றியுடன் தங்களது கணக்கை ஆரம்பித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இன்று(30) மூன்றாவது லீக் போட்டி நடைபெற்றது.
சென்னை அணி
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
குவாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்மூலம் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நேந்த்ரே பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆயுஷ் மாத்ரே முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். மேத்யூ ஷார்ட் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் சர்பராஸ் கானை இம்பேக்ட் சப் வீரராக களம் இறக்கியது.

இவர் 12 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். கார்த்திக் சர்மா 18 ஓட்டங்கள் எடுத்து பிரிஜேஷ் சர்மா பந்தில் வெளியேறினார்.
ஜேமி ஓவர்டன் தாக்குப்பிடித்து விளையாடினார். இவரது ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 17.1 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசிய ஓவர்டன் 4ஆவது பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க முயற்சித்த போது ரன்அவுட் ஆனார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 127 ஓட்டங்கள்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. ஓவர்டன் 36 பந்தில் 43 ஓட்டங்கள் சேர்த்தார்.
15 பந்தில் அரைசதம்
பின்னர் 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர்.

ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாட, முதல் ஓவரில் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யவன்ஷி 6ஆவது ஓவரின் 5ஆவது பந்த சிக்சருக்கு தூக்கி 15 பந்தில் அரைசதம் விளாசினார்.
4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 15 பந்தில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் 13 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். அதன்பின் அந்த அணிக்கான அதிவேக அரைசதம் இதுவாகும்.
ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்தார். இறுதி வரை நின்று ஆடிய அவர் 38 ஓட்டங்கள் எடுத்தார். துருவ் ஜூரல் 18, ரியான் பராக் 14 ஓட்டங்கள் எடுத்தனர். இறுதியில் 47 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் 128 ஓட்டங்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் எளிதில் வெற்றி பெற்றுள்ளது.