தொடர் தோல்விகளால் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்! புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்

Virat Kohli Chennai Super Kings Royal Challengers Bangalore TATA IPL IPL 2026
By Shadhu Shanker Apr 05, 2026 09:29 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 11ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதியுள்ளன.

இதன் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அணி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன் காரணமாக RCB அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி, பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

இதில், 4.3 ஓவர்களில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

அன்ஷூல் கம்போஜ் வீசிய பந்தில் தூபேவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

rcbvscsk

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 250 ஓட்டங்களை குவித்தது.

RCB அணி  தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 70 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 50 ஓட்டங்களையும், ரஜத் பட்டிதர் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

சென்னை அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 

இந்நிலையில், 251 ஓட்டங்கள் இலக்காகக் கொண்டு சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தற்போது களமிறங்கிய சர்பிராஸ் கான் 25 பந்துகளில் 50 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர் தோல்விகளால் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்! புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் | Csk Vs Rcb Score Updates

கார்த்திக் சர்மா 6 ஓட்டங்களிலும், ஷிவம் துபே 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பிரசாந்த் வீர் 29 பந்துகளில் 43 ஓட்டங்களிலும், ஓவர்டன் 16 பந்துகளில் 37 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் சென்னை 19.4 ஓவரில் 207 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

தொடர் தோல்விகளால் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்! புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் | Csk Vs Rcb Score Updates

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் ஆடி 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது இடம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US