உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நீரிணை மீண்டும் முழுமையாகச் செயற்படத் தொடங்கியுள்ளமை, உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகளைத் தணித்துள்ளதுடன் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய்: ஜூன் மாத விநியோகத்திற்கான விலை 10.42 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாய் 89.03 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI): மே மாத விநியோகத்திற்கான விலை 11.11 சதவீதத்தால் குறைவடைந்து, ஒரு பீப்பாய் 84.17 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டமை, அண்மைக்காலமாக எரிசக்தி சந்தையில் நிலவி வந்த தளம்பல் நிலையைச் சீர்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
you may like this