கச்சா எண்ணெய் ஒப்பந்தம் நைஜீரிய நிறுவனத்திற்கு - டீசல் ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு
இலங்கைக்கு மர்பன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தம், இலங்கைக்கான விநியோகஸ்தராக பதிவு செய்துள்ள நைஜீரிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விநியோகஸ்தர்களுக்கான விலை மனு கோரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் விசேட குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.