காகத்தின் பிடியில் இலங்கை நாடாளுமன்றம்: காப்பாற்றுவது எப்படி: உதய கம்மன்பில

Parliament of Sri Lanka Basil Rajapaksa Uthaya Gammanpila Sri Lanka Podujana Peramuna 21st Amendment
By Steephen May 30, 2022 10:48 AM GMT
Report

 “ரணில் கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நிதி அதிகாரம் மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காகத்திடம் இருந்து நாடாளுமன்றத்தை காப்பாற்ற முடியும்

காகத்தின் பிடியில் இலங்கை நாடாளுமன்றம்: காப்பாற்றுவது எப்படி: உதய கம்மன்பில | Crow Pariliament Politics Party

“ நாடாளுமன்றத்தின் பலம் காகத்திடம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 21வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த காகத்தின் பிடியில் இருந்து நாடாளுமன்றத்தையும் நாட்டை காப்பாற்ற முடியும்.

யார் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கி இந்த படுகுழியில் இருந்து வெளியில் வர வேண்டும்.

அப்படி வெளியில் வந்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். யார் சரி, யார் தவறு என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க சந்தர்ப்பத்தை வழங்குவோம்.

அடுத்த மாதத்தில் இருந்து மருந்துகள் இன்றி மக்கள் மடிவார்கள். உணவு இல்லாமல் போகும் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பலம் பசில் கையில்

காகத்தின் பிடியில் இலங்கை நாடாளுமன்றம்: காப்பாற்றுவது எப்படி: உதய கம்மன்பில | Crow Pariliament Politics Party

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவையே உதய கம்மன்பில, காகம் என மறைமுகமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் என்பதுடன் அவரே அவர்களை வழிநடத்தி வருவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.

இலங்கையில் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பசில் ராஜபக்சவை காகம் என்று போராட்டக்காரர்கள் குறிப்பிட்டு கோசமிட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US