22 வருட கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட்கார்ட்
போர்த்துகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 22 வருட கால்பந்து வாழ்க்கையில் முதன் முதலாக அவருக்கு ரெட்கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், 2026 பிபா கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோவிற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து உலக கோப்பை
நேற்றையதினம்(13) நடைபெற்ற 2026 பிபா கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டி டப்லினில் நடைபெற்றது.

இதில், 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது, அயர்லாந்து வீரர் டாரா ஓஷியாவை முழங்கையால் தள்ளி ஃபவுல் செய்ததற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
22 வருட கால்பந்து வாழ்க்கை
தனது 22 வருட கால்பந்து வாழ்க்கையில், ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

இது வன்முறை என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ரொனால்டோவிற்கு 3 போட்டிகள் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அர்மேனியாவிற்கு எதிரான போட்டியிலும், உலகக் கோப்பையில் முதல் 2 போட்டிகளிலும் ரொனால்டோ தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.