கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜேர்மன் விமானத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி நிலை! அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை?

German Sri lanka Katunayake airport
By Independent Writer Oct 17, 2021 09:44 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி Condor Air விமான சேவைக்கு சொந்தமான Boeing 867 ரக விமானமொன்று ஜெர்மனியின் Frankfurt-இல் இருந்து மாலைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.

சீரற்ற வானிலை காரணமாக விமானத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது விமானத்தில் 226 பயணிகள் இருந்துள்ளனர்.

அன்றைய தினம் முற்பகல் 11.26-க்கு தரையிறக்கப்பட்ட விமானம் பல மணித்தியாலங்கள் நாட்டில் இருந்துள்ளதுடன், அவசர தரையிறக்கத்திற்கான கட்டணத்தை செலுத்தும் போது கடனட்டை செயற்படாமையினால் விமானிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.


740 அமெரிக்க டொலர்களை கடனட்டை மூலம் செலுத்துவதற்கு விமானிகள் முயன்ற போது, அவர்களின் கடனட்டைகள் செயற்படவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவன நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

பின்னர், இந்த விமானத்தின் பெண் விமானி உள்ளிட்ட 2 விமானிகளும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 2 இடங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் கடனட்டை செயற்படவில்லை.

குறித்த கடனட்டைகள் சர்வதேச கட்டணங்களை செலுத்தும் வகையில் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை 45 நிமிடங்களின் பின்னரே அந்த விமானிகள் அறிந்துகொண்டுள்ளனர்.

அதன் பின்னரே அவர்கள் தமது வங்கிக்கு தொடர்புகொண்டு கடனட்டைகளை சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்றவாறு செயற்படுத்திக்கொண்டுள்ளனர். இதையடுத்து கட்டணங்களை செலுத்தியதன் பின்னர் பிற்பகல் 2.10 அளவில் அவர்கள் விமானத்திற்கு திரும்பியுள்ளனர்.

விமானம் பயணத்தை ஆரம்பிக்க 15 நிமிடங்கள் இருந்த நிலையில், அவர்கள் விமானத்திற்கு சென்றுள்ளனர். விமான ஊழியர்கள் பணியை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்காக செல்லும் நேரம் நெருங்கியமையால், இந்த விமானத்திற்கு அருகிலுள்ள வேறு நாடொன்றின் விமான ஊழியர்களை அழைத்து, பயணத்தை ஆரம்பிக்க நேர்ந்தது. என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமல் விமானத்தினுள் பெண்களும், பிள்ளைகளும் அடங்கலாக பயணிகள் பலரும் காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிகமாக விமானம் இலங்கை விமான நிலையத்தில் தங்கி இருந்தமையால் அதற்கு தாமத கட்டணமாக 74 டொலர்களை செலுத்தவேண்டும் என கோரியதால் விமானிகள் இந்த கட்டணத்தையும் செலுத்தவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் அது குறித்து Condor Air நிறுவனம் இலங்கையிடம் எதனையும் வினவவில்லை என விமான சேவை நிறுவன நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார். எனினும், இலங்கை விமான நிலையம் Condor Air நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி விடயத்தை தெளிவு படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விமான சேவையொன்று இலங்கையின் பிரதான விமான நிலையத்தில் எதிர்கொண்ட இந்த சம்பவத்தை சாதாரணமாக கருத முடியாதென அனுபவமுள்ள பிரதான சுற்றுலா செயற்பாட்டாளர் கலாநிதி அருண அபேகுணவர்தன தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தினத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளை தற்காலிகமாக சேவையில் இருந்து நீங்கியிருக்குமாறு அறிவித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இந்த அறிக்கை தமக்கு கிடைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் 226 பயணிகளை ஏற்றிய விமானமொன்று கட்டணம் செலுத்துவதில் ஏற்படுத்திய தாமதம் காரணமாக உருவான பிரச்சினையை அடிப்படையாக வைத்து, சர்வதேசத்தில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என மேலும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US