பிரித்தானியாவில் இராணுவத் தளபதியின் மகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி! சவேந்திர சில்வா அச்சம்
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் எதிரொலிகள் சர்வதேசத்திடம் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களாக வெளிப்படுத்தப்படுகிறன.
இந்நிலையில் இறுதியுத்தத்தில் போர்குற்றவாளிகளாக கருதப்பட்ட பல இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக தடைகளையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடான பிரித்தானியாவில், போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை பாடகி யோஹானிக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.
யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமாகியது.
மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட தரப்புக்கு இவ்வாறு பல தடைகளை சர்வதேசம் விடுத்துள்ளமை தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்திக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், தமது வலிகளை மறைக்கவும், மறுக்கவும் முடியாது என்பதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கான பாதை என்றும் கூறப்படுகிறது.
இதற்கமைய மே 18ஆம் திகதியான நேற்று இலங்கை மற்றும் உலகவாழ் தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறிய நிலையில், நீங்காத உரிமை போராட்டத்திற்கு சர்வதேசம் வழங்கிய பதில்களை விரிவாக ஆராய்கிறது கீழுள்ள காணொளி...

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
