நாட்டை உலுக்கும் பேரிடர்.. அநுர அரசுக்கு எதிராக குற்றவியல் வழக்கு
இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த பேரிடர் நிலைமை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் போலவே தீவிரமான சம்பவம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்கூட்டிய எச்சரிக்கை
மேலும், "ராஜபக்சக்கள் நாட்டை திவாலாக்கியதற்காக அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை போலவே, தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிராக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம், ஏனெனில் பேரழிவில் இறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்கள் பொறுப்பு" என்று அவர் தெரிவித்தார்.
பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக வழக்குத் தொடரப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |