கம்பஹா 'பபா'வின் தகவலில் பல ஆயுதங்கள் மீட்பு..!
பேலியாகொடை குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கம்பஹா 'பபா', கம்பஹா என்ற பிரபல கோடிஷ்வர வர்த்தகர் ஒஸ்மனை கொலை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த ஐம்பது ஏ.கே.47 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டாக்களை பொலிஸார் இன்று(19) கைப்பற்றியுள்ளனர்.
பேலியாகொடை குற்றப் பிரிவினர் கம்பஹா 'பபா'விடம் நடத்திய விசாரணைகளின் பின்னர் குறித்த தோட்டாக்கள் கெரவலப்பட்டியவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
50 தோட்டாக்கள் மீட்பு
இந்த 50 தோட்டக்களையும் கெஹல்பத்ர பத்மே கம்ஹா ஒஸ்னை கொலைச் செய்வதற்காக தனக்கு வழங்கியதாகவும் அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
நோபாளத்தில் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களின் இருவர் பேலியாகொடை குற்றப் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களால் நடத்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தொடர் தோடுதல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[
தேடுதல்கள்
அவ்வாறு நடத்தப்பட்ட தேடுதல்களின் போதே கெரவலப்பிட்டியவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கெரவலப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயின் அண்மையில் அமைந்துள்ள 18 ஆம் மையில் கல்லின் தென் பகுதியில் கொங்ரீட் கானில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மில்லி மீட்டர் 7.62 தொட்டாக்கள் 50 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நுகேகொடை 'பபி' என்பவரிடம் நடத்திய விசாரணையில் ஜம்புகஸ்முல்ல பகுதியில் பதுக்கி வைத்திருந்த கை குண்டு ஒன்றும் தோட்டாக்கள் 10ம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




